2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களால் நிறைந்துள்ள நீதிமன்ற வளாகம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருட்களாக ஒப்படைக்கப்படும் வாகனங்களால், நீதிமன்ற வளாகம் நிரம்பிக் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிதி முறைகளுக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபடும் டிப்பர் வாகனங்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றுக்கு எதிராக பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சான்றுப்பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள மேற்படி வாகனங்களால், நீதிமன்ற வளாகம் நிரம்பி காணப்படுகின்றது.

சான்றுப்பொருட்களான வாகனங்களை விடுவிப்பதற்கு நீதிமன்றால் கடுமையான பிணை நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், அவற்றை எடுக்கமுடியாதுள்ளதாக வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு வாகனங்கள் நீண்டகாலம் நீதிமன்றில் சான்றுப்பொருட்களாக இருப்பதால் அவை பழுதடையும் நிலை காணப்படுவதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சான்றுப்பொருட்களாக ஒப்படைக்கப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான இடங்கள் நீதிமன்ற வளாகத்தில் இன்மையால் பொலிஸ் நிலையங்களிலும் மேலும் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X