2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாள் வெட்டு: நால்வர் படுகாயம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் இன்று (17)  பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின் பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுதியில், இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நால்வரும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிசிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவத்தை அடுத்து, பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகின்றது.

வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், இராணுவ முகாம் ஊடாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

குறித்த தேடுதலில் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .