2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’வாழ்வு வளம்பெற தன்னாட்சி கிடைக்க வேண்டும்’

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தங்கள் வாழ்வு வளம்பெற வேண்டுமென்றால், தமக்குத் தன்னாட்சி கிடைக்க வேண்டுமென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - உடையார்க்கட்டுப் பகுதியில், செவ்வாய்க்கிழமை (31), 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அரசியல் ரீதியாகத் தன்னாட்சி தேவையாக உள்ளதெனவும் அதற்காகப் போராடிக்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அரசியலுக்கு அப்பால், மக்களின் வாழ்வை, நிறைந்த வாழ்வாக மாற்றுவதற்கு, தற்சார்பு முக்கியமெனவும் அவர் கூறினார்.

பல விதத்திலும் தங்கள் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், இப்பொழுதும் கல்வியில் பின்தங்கித்தான் இருக்கிறோமெனத் தெரிவித்த அவர், கல்வி நிலையை மேம்படுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இருப்பதாகவும், விக்னேஸ்வரன் கூறினார்.

அத்துடன், தங்களைத் தாங்களே வளம்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அரசாங்கத்தை நம்ப முடியாதிருப்பதாகவும், விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .