2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விசுவமடு வீதியில் விபத்து; சிறுமி படுகாயம்

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – பரந்தன், புதுக்குடியிருப்பு பிரதான வீதியின் விசுவமடு, 18ஆவது மைல் கல் பகுதியில், இன்று (09) காலை இடம்பெற்ற விபத்தில், சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நீராவியடி  பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் விருசிகா (வயது 18) என்ற சிறுமியே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, விசுவமடு சந்தி நோக்கிச் சென்ற சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது சைக்கிளைச் செலுத்திச் சென்ற குறித்த சிறுமி, படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்தையடுத்து, பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .