2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விசுவமடுவில் யானைகள் அட்டகாசம்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - விசுவமடுப் பகுதியில், தொட்டியடிக்  கமக்கார அமைப்பின் பகுதிகளான டி-3  மற்றும்  மேட்டுப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் காட்டுயானைகள் இரவில் புகுந்து  அட்டகாசம் செய்வதாக  அப்பகுதி  மக்கள்  தெரிவித்துள்ளனர்.

இதனால் தாம் வாழிடங்களைவிட்டு வெளியேறவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்பில் தொட்டியடிக் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான க.குலசிங்கம் கருத்துத்  தெரிவிக்கையில்,

“டி-3 தொட்டியடிப்  பகுதியில் இரவு  07  மணி தொடக்கம் யானையின் அட்டகாசததால் மக்கள் குடிபெயரும் நிலையில் இருக்கின்றார்கள்

“நாங்கள் வருடாவருடம் தோட்டங்கள், வயல் செய்து தென்னைகள் வைத்து தொடர்ச்சியாக யானைகள் அழித்துச் செல்கின்றன. இதை விட யானைகள் இங்குள்ளவர்களை தாக்க முற்பட்ட சம்பவங்களும் உள்ளன” என்றார்.

இதனால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்ததன் விளைவாக உரிய திணைக்களின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டதெனத் தெரிவித்த அவர், அந்தவகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து எமது பகுதிகள் பார்வையிடப்பட்டு வேலி அமைப்பதற்குரிய அடையாளப்படுத்தல்களை மேற்கொண்டுவிட்டுச் சென்றார்களெனவும் குறிப்பிட்டார்.

வேலி அமைத்துத் தருவதாகக் கூறிச் சென்றவர்கள், இன்னும் வேலி அமைக்கும் பணிகளில் முன்னேற்றம் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .