சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடக்கு மாகாண மக்களின் நன்மை கருதி எதிர்வரும் காலங்களில் 50 ஆயிரம் தொடக்கம் 8 இலட்சம் வரையான விசேட கடன் திட்டத்தை வழங்குவதுக்கு திட்டமிடப்பட்டுள்ளது” என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்க இன்று (03) தெரிவித்தார்.
கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உணவு பதனிடும் நிலையத்தை இன்று (03) திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் பல்வேறு திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். இந்நிலையில், வடக்கு மற்றும் வட மத்திய மாகாண மக்களுக்காக எதிர்வரும் காலங்களில் 50 ஆயிரம் தொடக்கம் 8 இலட்சம் வரையான விசேட கடன் திட்டத்தை வழங்குவதுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த காலங்களில் வங்கியில் பெறப்பட்ட 50 ஆயிரத்துக்கு குறைவான கடன்களை செலுத்த முடியாதவர்களுக்காக 6 மாதங்கள் விசேட சலுகைகள் வழங்கியுள்ளோம். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று விசேட கடன் திட்டத்தை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளோம். எனவே தொழில் முயற்சியாளர்கள் திட்டங்களை வகுத்து தயாராக இருங்கள். 6 வீத வட்டி அடிப்படையிலேயே குறித்த கடன்கள் வழங்கப்படவுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago