Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 31 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கலந்துரையாடல், இன்று காலை, மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார், வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன் தமைமையில் குறித்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், நாட்டில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பார தூரமானதும் மிக முக்கியமாக கருதப்படக்கூடியதுமான விடயங்கள் தொடர்பாக மன்னார் சிவில் சமூக மட்ட பிரதி நிதிகளால் மனித உரிமை ஆணைக்ககுழுவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, வடக்கு-கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவதாகவும், நடத்தப்படுவதாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
குறித்த கருத்துகளை பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், குறிப்பாக பொது மக்கள் அரச அதிகாரிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சில பகுதிகளில் இடம் பெற்று வரும் கைதுகள் தொடர்பாகவும் சில முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெறும் நிலம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர் என்றார்.
ஆணைக்குழு இவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதுடன், இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளை அழைத்து மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறுவதுடன் குறித்த கலந்துரையாடலுக்கு இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அழைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago