Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
க. அகரன் / 2019 ஜூலை 02 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவையினை அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் அரசியல்வாதிகள் உட்பட அதிகாரிகளுக்கு கொடுத்து வந்த அழுத்தத்தினால் பேரூந்து சேவையினை பெற்றுக்கொண்டனர்.
வவுனியா தரணிக்குளம் புதிய நகருக்கு அருகில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும் பேரூந்து சேவைகள் இல்லாத நிலையில் 3 கிலோமீற்றர் தூரம் நடந்து வந்தே பேரூந்து சேவையினை பெறவேண்டிய நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தரணிக்குளம் பழைய கிராம மக்களுடன் இணைந்து தமது கிராமத்திற்கு பேரூந்து சேவையினை பெற்றுத்தரவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்து வந்திருந்தனர்.
இந் நிலையில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் மக்களின் நன்மை கருதியும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் இன்னல்களை கண்ணுற்றும் தம்மால் பேரூந்து சேவையினை வழங்க முடியும் என உறுதியளித்திருந்தனர்.
இதன் காரணமாக நேற்று காலை 10 மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. கே. ராஜேஸ்வரன் மற்றும் சங்கத்தின் செயலாளர் உட்பட சிலரும் குறித்த பகுதிக்கு பேரூந்து சேவையினை ஆரம்பிக்க வருகை தந்திருந்தனர்.
எனினும் பேரூந்து செலவ்தற்கான வீதி போதுமானதாக இன்மையால் பேரூந்து சேவையினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக வீதியை அகலமாக்கிய பினனர் பேரூந்து சேவையினை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கிராம மக்கள் தமக்கான சேவையினை தொடங்குமாறும் வீதி தொடர்பான செயற்பாடுகளை தாம் முன்னின்று சில நாட்களுக்குள் தீருத்தம் செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.
இந் நிலையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த வீதியை பிரதேசசபையுடன் கலந்துரையாடி அகலமாக்கி தருவதாகவும் பேரூந்து சேவையினை ஆரம்பிக்குமாறும் கோரியிருந்தார்.
இதனையடுத்து பேரூந்து சேவையினை குறித்த கிராமத்தின் கிராம சேவகர் மற்றும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago