2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘விடுதலைப் புலிகளின் காலத்தில் நல்ல கட்டமைப்புகள் காணப்பட்டன’

எஸ்.என். நிபோஜன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“தமிழீழ விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் நல்ல கட்டமைப்புகள் காணப்பட்டன” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று, சர்வதேச தொளிலாளர் சங்கமும் ஸ்ரீ லங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக் கல்விக் கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் தொழிலாளர்கள் தமக்குரிய உரிமைகள், சலுகைகள் மற்றும் சட்டங்கள் என எதையும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

“இத்தகைய  செயலால், முதலாளி வர்க்கம் தொளிலாளர்களை சுரண்டுகிறார்கள். ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிக் காலத்தில், இவ்வாறான சூழ்நிலைகள் அரிதாகவே காணப்பட்டன.

“ஏனெனில், அவர்களது கட்டமைப்புகள் திடமானவையாகவும் தெளிவானவையாகவும் காணப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், SLNSSஇன் பொதுச்செயலாளர் வெஸ்லி தெய்வேந்திரா, தொளிலாளர் பிரதி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .