2025 மே 08, வியாழக்கிழமை

விதிகளை மீறிய நிதி நிறுவனங்கள் சிக்கின

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கடை வீதியில், சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிய நிதிநிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியா கடை வீதியில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில், இன்று (07) சுகாதார அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் அதிக ஊழியர்களை அழைத்து  செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், இரண்டுக்கும் மேற்பட்ட பிரபல நிதி நிறுவனங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

இதேவேளை, கிராமப்புற பகுதிகளிலும், வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பலசரக்கு விற்பனை நிலையங்களும், சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X