Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான விதைநெல் கையிருப்பில் இருப்பதாக, விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிலையம் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் தேவையான விதை நெல் கையிருப்பில் இருப்பதாகவும் கூடுதலான விவசாயிகள் விதை நெல்லை தற்போது கொள்வனவு செய்து வருவதாகவும் தெரிவித்தது.
தேவையான நெல் வர்க்கங்கள் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்த அந்நிலையில், மேலதிகமாக நெல் தேவை ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களில் இருந்து விதை நெல்லைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் நிலவிய வரட்சி காரணமாக பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளமுடியாது போனாலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் 1,800 ஏக்கரிலும் ஏனைய புதுமுறிப்பு மற்றும் ஏனைய சிறிய குளங்களில் கீழ் ஆயிரம் ஏக்கரிலும் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் விதைநெல் தடடுப்பாடு என்பது இல்லையெனவும் துறைசார் திணைக்கள்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026