Niroshini / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - உலுக்குளம் பகுதியில், நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில், 16 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஹன்சா டில்சான் மிகிரிங்க (வயது 16) என்ற சிரசுமன ம. வி. நவோத்தயா பாடசாலையில் கல்வி கற்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த சிறுவன், உலுக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, அந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago