2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் அரச சொத்துகளுக்கு சேதம்

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில், இன்று (05) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வான் ரயரில் காற்று வெளியேறியமையால், கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்துக்குள்ளானது.

இதனால் கிளிநொச்சி ஏ9 மய்யத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் சேதமடைந்ததுடன், வீதி மின்விளக்கு கம்பமும் சேதமடைந்துள்ளது. அத்துடன், வானும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இவ்விபத்தால், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பில், வீதி அபிவிருத்தி அதிகார சபை மதிப்பீடு செய்து வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .