Editorial / 2018 நவம்பர் 06 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன், எம்.றொசாந்த்



கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று (06) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன் (வயது 18) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரை மற்றைய இளைஞர் அடையாளம் காணப்படவில்லை.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago