2026 மே 02, சனிக்கிழமை

விபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் இன்று (05) இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளனது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்  சென்ற 15 வயதுடைய சிறுவனும் அவனுடன் பயணித்த மற்றுமொரு சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பகல் 10 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .