2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் பலி

Niroshini   / 2021 நவம்பர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி ஏ9 வீதி, பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில், நேற்று  (09) இரவு இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பரந்தன் பகுதியைச் சேர்ந்த ம. யூட்பவிஷன் (வயது 29), ச.காந்தீபன் (வயது 34) ஆகியோரே, இவ்வாற உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியொன்று, பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்துக்கு சீமெந்து இறக்கிய பின்னர், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X