2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் ஏழு பேர் காயம்

Editorial   / 2019 மே 31 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற ஓட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து, முத்துஐயன்கட்டு புனித பூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் நேற்று (30)  மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து 5 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் பாடசாலை மாணவன் மற்றும் பிரதேச இளைஞன் ஒருவரும் மேலதி சிகிச்சைக்காக யாழ். பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .