2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் கிராம அலுவலகரும் மனைவியும் பலி

Niroshini   / 2021 மே 26 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முழங்காவில் - பல்லவராயன் கட்டுச் சந்தியில், நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில், கிராம அலுவலகர் ஒருவரும் அரவது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவிலில்; கிராம அலுவலராகப் பணியாற்றிய பாலசிங்கம் நகுலேஸ்வரன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

 நேற்று  (25) இரவு 7 மணியளவில் இருவரும்  மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, முழங்காவில் - பல்லவராயன் கட்டுச் சந்தியில் வைத்து, இவ்விருவரும் வீதியில் விபத்துக்குள்ளான நிலையில், வீதியில் கிடந்துள்ளனர்.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள், இராணுவத்தின் உதவியுடன் இருவரையும் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன்போது, குறித்த கிராம அலுவலகர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அவரு மனைவி அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துக்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த முழங்காவில் பொலிஸார், இவர்கள் விபத்தால் உயிரிழந்தனரா அல்லது அல்லது யானை தாக்கி இறந்தனரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X