2026 மே 01, வெள்ளிக்கிழமை

விபத்தில் சிறுவர்கள் படுகாயம்

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் தண்ணீரூற்றுப் பகுதியில், நேற்று  (24) இரவு இடம்பெற்ற விபத்தில், சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள், மாமூலை பகுதியைச் சேர்ந்த சு.கஜீவன் (வயது 17), ய.நிலுயன் (வயது 18) என்பவர்களாவரென, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சிறுவர்களும், முல்லைத்தீவில் இருந்து தண்ணீரூற்றுக்கு, மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, வளைவொன்றில் வைத்து வேகக் கட்டுபாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த இரு சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .