2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

விபத்தில் படுகாயடைந்த சிறுவன் உயிரிழப்பு

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்,  எஸ்.றொசேரியன் லெம்பேட்

கிளிநொச்சி - கரியாலைநாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாக, கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயங்களுக்குள்ளான சிறுவன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், புதன்கிழமை (21) இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி கற்ற, அ.அபினாஸ் (வயது 12) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஏ-32 வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவனை, பின்புறமாகச் சென்றுகொண்டிருந்த கார் மோதிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.

இது தொடர்பாக, முழங்காவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை  தகுந்த நடவடிக்கை எதையும் பொலிஸார் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .