Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - மன்னார் பிரதான வீதியில், நேற்று (12) மாலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்று, புதிய சாளம்பைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பின்புறமாக பயணித்த பிளசர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த உழவியந்திரத்தை முந்தி செல்ல முற்பட்ட போது, உழவியந்திரத்தின் பின் பகுதியிலுள்ள கலப்பையில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிக்குளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் படுகாயமடைந்ததாக, பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago