2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபத்தில் மூவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (08) பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி நோக்கிப் பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளையைச் சேர்ந்த பி.ஜெயக்குமார் (வயது 36), கே.குகதாஸ் (வயது 32), மற்றும் சுழிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ரதீஸ்வரன் (வயது 26) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .