2025 மே 22, வியாழக்கிழமை

விபத்து: ஒருவர் பலி

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிறுப்பு சந்தியில், நேற்று (6) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த எ.அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞரே, குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிரிதொரு நபரும் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில்  நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பட்டா ரக வாகனம் சரியான பாதையூடாக மன்னார் நோக்கி பயணித்த போது,  குறித்த பாதையூடாக நேர் எதிரே குறித்த மோட்டார் சைக்கில் பயணித்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மது போதையில் காணப்பட்டதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X