2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்’

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று தேர்தலும் இடம்பெறும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டன் பின்னர் புதிய அரசியல் அமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கப்படும் என தெரிவிக்கப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மஸ்தான்,

“ஒவ்வொருவரும் தற்போது தாங்கள் நினைத்ததை கூறுகின்றனர். 13ஆவது திருத்தம் இல்லாமல் ஆக்கப்படும் என்று இல்லை. இவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்படும் என எமது தரப்பாலும் இதுவரையில் எமக்கு கூறப்படவும் இல்லை.

ஒரு சமூகத்துக்கான தீர்வாக மாகாண சபைகள் இருக்கும் போது அதனை இல்லாமல் ஆக்குவார்கள் என்பதெல்லாம் தேர்தல் காலத்தில் சொல்லப்படுவதுபோல பிழையான கருத்துகள். உண்மையில் மாகாண சபைத் தேர்தலை வைக்க முடியாத சூழலை ஏற்படுத்தியதே கடந்த அரசாங்கம்தான்.

எனினும், விரைவாக அதற்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டு மாகாணசபை தேர்தலும் விரைவில் நடைபெறும்” என மஸ்தான் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .