2025 மே 21, புதன்கிழமை

விலை விவகாரத்தால் விவசாய முயற்சி தோல்வி

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், நெல்லுக்கான நியாய விலை கிடைக்காததன் காரணமாக, தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதாக, முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஒரு மூடை வெள்ளை நெல் - 2,500 ரூபாய்க்கும் ஒரு மூடை சம்பா நெல் - 2,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் காரணமாக, விவசாய முயற்சிகள் படுதோல்வி அடைந்துள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை, விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதில்லையெனவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .