2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விளைச்சல் வீழ்ச்சியால் விவசாயிகள் அவதி

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இம்முறை பெரும்போக நெல் விளைச்சல் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயிர்ச்செய்கைகளுக்குரிய இரசாயன உரமின்மை மற்றும் களை நாசினி, கிருமி நாசினி என்பவற்றின் விலையேற்றம் காரணமாக அவற்றைத் தாம் வாங்கி பயன்படுத்ந முடியாத நிலை போன்ற காரணங்களினாலேயே இம்முறை தமது பெரும்போக நெற்செய்கையின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தற்போது எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் அறுவடை இயந்திரக்கூலி முன்பை விடத் தற்போது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஏக்கர் ஒன்றிற்கு தாம் 9,000 ரூபாய் தொடக்கம், 10,000 ரூபாய் வரையில் அறுவடை இயந்திரக்கூலியாக வழங்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனைவிட நெல்லைச் சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு தாம் முகங்கொடுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக உலர்ந்த சிவத்தப் பச்சை(கோறா) நெல்லை வியாபாரிகள் 6,000ரூபாய்க்கு தம்மிடமிருந்து பெறுவதாகவும், உலராத நெல்லை 4,500ரூபாய்க்கு பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே தாம் கட்டாயமாக நெல்லை உலரவைத்து சந்தைப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது முல்லைத்தீவில் மும்முரமாக நெல் அறுவடை இடம்பெறுவதால், விவசாயிகள் அனைவரும் நெல் உலரவிடும் தளங்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆகவே, முல்லைத்தீவு விவசாயிகள் பலத்த இன்னல்களுக்கு மத்தியில், பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X