2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வுப் பேரணி

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் 

குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தினால், கரைதுறைப்பற்று பிரதேசத்தில், இன்று (26) உளநலம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

முள்ளியவளை பிரதேசத்தில் இருந்து ஆரம்பமன இந்தப் பேரணி, நீராவிப்பிட்டி வரை 2.9 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றது.

இதன்போது, துண்டு பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து மாலை 2 மணியளவில் சிலாவத்தை சந்தியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி, 1.5 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் வரை சென்றடைந்து, அங்கு உள நலம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளுடன் நிறைவடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .