2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விழிர்ப்புணர்வு கருத்தமர்வு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில், பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டம் தொடர்பிலான, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிர்ப்புணர்வு கருத்தமர்வு, மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்றுக் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இதில், மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில், நகர சபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு, அது தொடர்பில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .