2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’விவசாயிகள் கேட்கும் காணிகளை வழங்குவதில் சிக்கல்’

Niroshini   / 2021 ஜூலை 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட சின்னப் பல்லவராயன்கட்டு  பிரதேசத்தில், விவசாயிகள் கோருகின்ற காணிகள்  தனியார் காணிகளாக காணப்படுவதனால், அவற்றை அவர்களுக்கு  வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக, பூநகரி பிரதேச செயலாளர் எஸ் கிருஷ்ணேந்திரன்  தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  சின்னப் பல்லவராயன்கட்டு  பிரதேசத்தில், விவசாயிகள் கோருகின்ற காணிகள்  தனியார் காணிகளாக காணப்படுவதனால், அவற்றை அவர்களுக்கு  வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுகின்றன என்றார்.


காணிநடமாடும் சேவைகளை நடத்தி அதன் மூலம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,  2014ஆம் ஆண்டிலிருந்து இந்த காணிகளுக்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டு வருகின்றன எனவும் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஒரு காணி நடமாடும் சேவை ஒன்றை நடத்துவதற்கான அனுமதி கிடைத்து, அது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

"இந்நிலையில், இரண்டாவது காணி நடமாடும் சேவை மேற்கொள்ள  வேண்டியுள்ளது. தனியார் காணி என்ற அடிப்படையில் அதனை அந்த மக்களுக்கு வழங்குவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதாவது சில காணி உரிமையாளர்கள்  காணி உரிமம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்"
 என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .