2025 மே 08, வியாழக்கிழமை

வீடு உடைத்து கொள்ளை: வயோதிபர் காயம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், 1ஆம் திகதியன்று, வீடொன்றுக்குள் உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த நகை. பணம் என்பனவற்றை கொள்யைடித்து சென்றுள்ளார்கள்.

இதன்போது வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அதிகாலை வேளையில், வீட்டொன்றுக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு, வீட்டில் இருந்த பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, பொக்ஸ்செயின், இரண்டு சங்கிலிகள் என்பவற்றை அபகரித்ததுடன், வீட்டில் இருந்து இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X