2025 மே 09, வெள்ளிக்கிழமை

’வீடுகளில் உடன் குடியேறவும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொண்டவர்கள்,அவ்வீடுகளில் வசிக்காமல், பிற இடங்களில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த வீடுகள் பராமரிப்பற்று காணப்படுவதாகவும் இதன் காரணமாகவே, நிரந்தர வீடுகளில், வெள்ளிக்கிழமை (30) முதல் குடியேற வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில், வீட்டின் பயனாளிகள் மாற்றப்படுவார்கள் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X