2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, பொன்னகர் பகுதியில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளிலிலிருந்து, மக்கள் தொடர்ச்சியாக வௌியேறி வருகின்றனரென, கரைதுரைப்பற்று பிரதேசச் செயலகம் தெரிவித்துள்ளது.

பொன்னகர் பகுதியில், 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்ட போதிலும், தற்போது வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனரெனவும் அங்கு தங்கியிருப்பவர்கள் யாரும், அங்கு இருப்பதற்கு விரும்பாத நிலையிலேயே, அவ்வீடுகளை விட்டுச் செல்கின்றனரெனவும், செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது குடியேற்றியவர்களுக்கே, காணி ஆவணங்களை வழங்கியுள்ளதால், அதனை மாற்றி வழங்குவதிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பொன்னகர் பகுதயிலுள்ள மேற்படி வீட்டுத்திட்டத்தில், குடிநீர்ப் பிரச்சினை மற்றும் வீடுகள் தரமானதாக இல்லை போன்ற காரணங்களால், அங்கு மக்கள் வாழ்வதற்கு விரும்புவதில்லை எனவும், செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

பொன்னகர் பகுதியில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள், தற்போது சேதமடைந்து, மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில், வீடுகளைப் பெற்றுக்கொண்ட மக்கள், அந்த வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X