2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘வீட்டுத்திட்டங்கள் வழங்கும் நிலை இன்று மாற்றப்பட்டுள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள், சமூகம் சார்ந்து வழங்கும் நிலை இன்று மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

வவுனியாவில், நேற்று (02) நடைபெற்ற வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமது மக்களின் நலன்சார்ந்து, அவர்களது தேவைகள் சார்ந்து அரசாங்கத்துடன் சில விடயங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், தாங்கள் இருப்பதாகவும் இல்லையானால் எங்களை மிதித்து தமது தேவைகளை நசுக்கி தமது அரசியலை பூர்த்தி செய்யும் நிலையில்தான் மற்றவர்கள் இருக்கிறார்களெனவும் குறிப்பிட்டார்.

எனவே, தமது தேவைகளை பூர்த்தி செய்யகூடியவர்களே இந்த நாட்டை ஆழ வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .