Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள், இன்று (13) காலை, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு, போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களுக்காக, சனிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்ட ஆரம்ப வேலைகள், பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டன.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (13) முற்பகல் 10 மணியளவில், முல்லைத்தீவு மாவடட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள், குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடுவதற்கு செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட போது, மாவட்டச் செயலக வாயிலில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அந்த மக்கள் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், மாவட்டச் செயலாளரை சந்திப்பதற்கு 3 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த மூவரும் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடியதையடுத்து, ஒருவார காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தருவதாகவும், அதுவரை காலஅவகாசம் தருமாறும், போராட்டக்காரர்களை வந்து சந்தித்து மாவட்டச் செயலாளர் தெரிவித்தார் .
இதனை ஏற்க முடியாதெனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் கடும் தொனியில் எச்சரிக்கைவிடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
43 minute ago
48 minute ago
2 hours ago