Niroshini / 2021 ஜூலை 12 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்துள்ள 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டை கட்ட முடியாத குடும்பங்களுக்கு படையினரின் உதவியை வழங்க வேண்டுகிறேன் என, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில், இன்று (12) நடைபெற்ற இராணுவத்தினரால் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி இராணுவ தலைமையக்க் கட்டளை அதிகாரியின் பணிப்பின் பேரில், சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது பணிப்பின் பேரில் படையினர் காவல் கடமயில் ஈடுபட்டு கட்டுப்படுத்தி உள்ளனரென்றும் கூறினார்.
"இந்த நிலையில் கிளிநொச்சி இராணுவ தலமைக் கட்டளை அதிகாரியிடம் மற்றுமொரு கோரிக்கையை இந்த நிகழ்வில் விடுக்கின்றேன். எமது மக்களுக்கு தற்போது பத்து இலட்சம் மற்றும் 6 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ளன. அதில் 6 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டம் கிடைத்தவர்கள் 2 அங்கத்தவர்களுக்கு உட்பட்டவர்களாவர். அவர்களில் சில குடும்பங்கள் குறித்த தொகைக்குள் கட்டி முடிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அவ்வாறான குடும்பங்களுக்கு படையினரின் உதவியுடன் வீடுகளை அமைத்து கொடுக்க நான் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றேன்" என்றார்.
குறித்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்தில் பிரதேச செயலாளரின் கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்த கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க, 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அவ்வாறான குடும்பங்களை அடையாளம் காட்டுமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago