2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வெறிச்சோடிய நகைக் கடைகள்

Princiya Dixci   / 2022 மார்ச் 24 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள்  உள்ளடங்களாக  நகை தொழிலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விற்பனை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி அதிகரிப்பு, பொருள்களுக்கான தட்டுப்பாடு, வருமானம் இன்மையால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும்  தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையால் நகை கொள்வனவுகள் பாரிய அளவில் குறைவடந்துள்ளதாகவும் மன்னார் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.

இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நகை விற்பனை நிலையங்களுக்கான மின் கட்டணம் , நீர் கட்டணம் மற்றும் வாடகை பணம் செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் நகை விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X