2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வெறிச்சோடியது திருமுறிகண்டி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, முல்லைத்தீவு, திருமுறிகண்டி ஆள் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது. 

இதனால், திருமுறிகண்டி பிள்ளையாளர் கோவில் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் தமது அன்றாட உணவுக்கே பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். 

ஏ-9 வீதியின் திருமுறிகண்டி கோவில் சூழலில் சுமார் 75க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பல்வேறு வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைவடைந்து போக்குவரத்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் கோவில் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.

தற்போது இங்கு இரண்டு அல்லது மூன்று கடைகளே நாளாந்தம் திறக்கப்படுகின்ற போதும் அவற்றில் கூட நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கான வருமானத்தைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .