Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 மார்ச் 19 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் தொடர்ந்தும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப்பிரதேசங்களில் காலத்துக்கு காலம் வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற நிபந்தனை மீறிய தொழில்களாலும் தமது வாழ்வாதாரத்தொழில் முழுமையாகப்பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை வலைஞர் மடம், போன்ற பகுதிகளில் வாழும் 80 வீதமான குடும்பங்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் உள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களும் கரையோரப்பிரதேசங்களில் கிடைக்கின்ற தொழில் வாய்ப்பை வைத்தே தமது வாழ்;வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
மேற்படி சட்;டவிரோத தொழில்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பிரதேச மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago