2025 மே 22, வியாழக்கிழமை

’வெளியேறும் நீரைக் கட்டுப்படுத்தவும்’

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நீரைக் கட்டுப்படுத்துவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன்னேரிக்குளம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளத்தின் கீழ், 363 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் குளத்தின் பின்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வால் குளத்தின் நீர் பின்வழியாக வெளியேறுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

விவசாயிகள் ஒன்றிணைந்து 1,500 வரையான மண் மூடைகள் அடுக்கி நீரினை வெளியேறாது தடுக்கின்ற போதிலும் நீர் வெளியேறுவதைத் தடுக்க முடியாது இருக்கும் நிலையில் பத்து மில்லியன் ருபாய் செலவில் தடுப்பணை ஒன்றை அமைப்பதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது.

தற்போது குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், நீர் வெளியேறாத சந்தர்ப்பம் காணப்படும் நிலையில், மழை வீழ்ச்சி இடம்பெற்று நீர் மட்டம் உயருமானால், குளத்தின் நீர் வெளியேறுகின்ற நிலைமை உள்ளது.

இந்நிலையில் குளத்தின் நீர் பின்வழியாக வெளியேறாமல் தடுப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X