2025 மே 01, வியாழக்கிழமை

வேணாவில் கிராம மக்களின் போராட்டத்துக்கு வெற்றி

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

வேணாவில்  கிராம மக்களின் போராட்டத்துக்கு வெற்றி கிட்டியதை தொடர்ந்து, 15 குடும்பங்களுக்கான காணியும் வீட்டுத்திட்டமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில்,  காணிகள் அற்ற மக்கள் தமக்கு வாழ்விட காணிகள்  வழங்குமாறு, தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கான காணிகள் தொடர்ச்சியாக வழங்கப்படாத நிலையில், கடந்த வருடம்,  குறித்த கிராமத்தில் இருந்த பற்றைக்காடுகளைப் துப்புரவு செய்து, அதற்குள் குடியேற முற்பட்டபோது, புதுக்குடியிருப்பு  பொலிஸார் வருகை தந்து, அவர்களை தடுத்து நிறுத்தியதோடு, உரிய வகையில் அனுமதி பெற்று, அந்தக் காணிகளில் குடியமருமாறு  தெரிவித்திருந்தனர்.

தொடர்ச்சியாக இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத  நிலையில், கடந்த வருடம் டிசெம்பர் குறித்த பகுதியில் காணிகளற்ற  சுமார் 15  குடும்பங்கள், வீதியோரத்தில் கொட்டில்களை அமைத்து தொடர் போராட்டத்தில் குதித்தனர்.

இதன் போது, ஐந்து மாத கால அவகாசத்துக்குள் உங்களுக்குரிய காணிகளை வழங்குவதாக, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த கோரிக்கைகளை முன்வைத்த 15 குடும்பங்களுக்கான காணிகள் மற்றும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் வழங்குவதற்கு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்கால்.
இந்நிலையில், குறித்த காணிகளை துப்புரவு செய்யும் பணியில் குறித்த குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த காணிகள் துப்புரவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான காணிகளை அளவீடு செய்து வழங்கப்படவுள்ளதோடு,அவர்களுக்கான  வீட்டுத்திட்டங்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமது கிராமத்தில் தங்களைப் போல காணிகள் வீடுகளற்று இருக்கின்ற குடும்பங்களுக்கான காணிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .