Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே கண்ணன்
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு பிரதேச செயலகத்தால் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவினருக்கு வழங்கப்பட்ட காணியிலேயே இம்மைதானம் அமைக்கப்படவுள்ளது .
2018ஆம் ஆண்டுக்கான 10 மில்லியன் ரூபாய் மாகாண உட்கட்டுமான நிதியில் இருந்து (PSDG) ஒதுக்கீடு செய்யப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதில் பூப்பந்து, கரப்பந்து, கபடி, கராத்தே, குத்துச் சண்டை இன்னும் பல போட்டிகள் நடத்த கூடியதாகவும் பயிற்சியை மேற்கொள்ள கூடியதாகவும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கம் அமையவுள்ளது.
2013ஆம் ஆண்டில் 30 மில்லியன் ரூபாய் உள்ளக விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், உள்ளக விளையாட்டு அரங்கு வேலைகள் கால தாமதம் காரணமாக மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கு நிதியுதவி மாற்றம் செய்யப்பட்டது.
மீண்டும் மாகாண விளையாட்டு திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட ஏற்பாடாகி வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளக மைதானம் இல்லாமல் அப்பகுதி மாணவர்கள் மற்றும் வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago