2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வைக்கோலுக்குத் தீ வைத்தால் கொடுப்பனவு நிறுத்தப்படும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

 

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கபபடவுள்ளதாக, கிளிநொச்சி கமநலசேவை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழ், இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச்செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டு, 60 சதவீதமான காணிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை அறுவடை செய்த விவசாயிகள், வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலுக்குத் தீ வைத்து வருகின்றனர். இயற்றைப் பசளையாகக் காணப்படுகின்ற இந்த வைக்கோலுக்கு, தீ வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலைத் தீ வைத்துக் கொழுத்த வேண்டாமென பல தடவைகள் கமநலசேவை நிலையத்தால் அறிவித்தல் விடுத்தபோதும், விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அறுவடை மேற்கொண்ட வயல் நிலங்களில் உள்ள வைக்கோக்குத் தீ வைக்க வேண்டாமென்று மீண்டும் அறிவுறுத்தியுள்ள கிளிநொச்சி கமநலசேவை நிலையம், அவ்வாறு தீ வைக்கும் விவசாயிகள் பற்றிய விவரங்களை கமநலசேவை நிலையத்துக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதேச கமக்கார அமைப்புகளக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான விவசாயிகள் அடையாளம் காணும் பட்சத்தில், எதிர்காலத்தில் அவர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் நிறுத்தப்படுமெனவும், கமநலசேவை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .