2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’வைத்தியசாலையின் கழிவு நீர் குடிநீரில் கலப்படம்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்படும் கழிவு நீரால்,  குடிநீர் மாசுப்படுவதோடு, துர்நாற்றமும் வீசுவதாக, வைத்தியசாலை சூழலில் வசிக்கின்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்படும் கழிவு நீரானது, ஆறுக்குள் கலந்துவிடுகிறது. இவ்வாறு கலக்கடும் கழிவு நீர், ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது.

கிளிநொச்சி குளத்திலிருந்தே கிளிநொச்சி பகுதிகளுக்கான குடிநீர் பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில், வைத்தியாசாலையின் இரசாயனங்கள் அடங்கியிருக்கலாம்.

எனவே அவற்றை சுத்திகரிக்கின்ற வசதிகள், கிளிநொச்சி குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காணப்படுகிறதா? அங்கிருந்து குழாய் வழியாக விநியோகிக்கப்படும் நீரை தாம் குடிநீராக பயன்படுத்தலாமா என்பதை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவிக்க வேண்டுமெனவும், அப்பகுதி பொது மக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையின் அயலில் உள்ள மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக, வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் கழிவு நீரானது, தமது குடிநீர் ஆதாரங்களை மாசடையச் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

“அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம், அயலில் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என, வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை அதனை நிவர்த்தி செய்வதற்கு எதுவித நடவடிக்கையும் நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை”எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .