Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் போதிய இடவசதிகள் இன்றியும் கட்டட வசதிகள் இன்றியும் இயங்கி வருவதால் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் வைத்தியசாலை நிர்வாகமும் சிகிச்சைபெறச் செல்லும் நோயாளர்களும் பல சிரங்களை எதிர்கொள்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுமார் 1 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்களினதும் ஏனைய முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கும் சிகிச்சைகளை வழங்கவேண்டிய நிலையில் காணப்படுகின்ற கிளிநொச்சி பொதுவைத்தியசாலை, இன்றும் பல்வேறு தேவைகள் கொண்ட ஒரு வைத்தியசாலையாகவே காணப்படுகின்றது.
அதாவது, வெளிநோயாளர் பிரிவுக்கான போதிய இடவசதி, மாதாந்த கிளினிக் நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கான இடவசதி என்பன பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.
இதைவிட, என்புமுறிவு, சிகிச்சைப்பிரிவு, ஆய்வுகூடம், பதிவாளர் அலுவலகம், பொலிஸ் பிரிவு களஞசியவசதி என்பன இல்லாத நிலை காணப்படுவதுடன், உள நல சிகிச்சைப்பிரிவுக்கான உள்நோயாளர் விடுதி மற்றும் ஏனைய விடுதிகளும் போதிய இட வசதிகள் இன்றி காணப்படுகின்றன.
இதனைவிட, கண் நோயாளர்களுக்கான உள்நோயாளர் விடுதி, ஆய்வுகூடம், விபத்துப் பிரிவு என்பனவும் தேவையாகவுள்ளன.
இவ்வாறு பல்வேறு தேவைப்பாடுகள் கொண்ட இவ்வைத்தியசாலையில் நிலவுகின்ற பௌதீக வள நெருக்கடிகளால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் அதேநேரம் இந்தமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற வைத்தியசாலை நிர்வாகம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026