Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமிக்கக் கோரி, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தியச் சுகாதாரப் பணிமனை வளாகத்தில், இன்று (29) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முல்லைத்தீவைச் சேர்ந்த பொது அமைப்புகள், கிராம அமைப்புகள், வர்த்தகச் சங்கத்தினர், கடற்றொழிலாளர் சங்கத்தினர், பஸ் உரிமையாளர் சங்கத்தினர், பொதுசந்தை வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தியச் சுகாதாரப் பணிமனை வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
2018ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வைத்தியசாலைக்கெஎன நிதந்தர வைத்தியர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், நோயாளர்கள் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனரெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டடினர்.
எனவே, மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர் நேரில் வந்து சாதகமான முடிவைத் தரும் வரை, போராட்டம் தொடருமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
3 hours ago