2025 மே 15, வியாழக்கிழமை

வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள், இன்று (17) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு வகையிலும் பின்தங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சீராக இயங்காததால், மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படாததன் பின்னணியிலேயே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன், ஆண்டிஜயா புவனேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, போராட்டம் இடம்பெற்ற பகுதியில், முள்ளியவளை பொலிஸார், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பலரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .