2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஸார்ப் நிறுவனத்துக்கு ஜப்பானியத் தூதரகப் பிரதிநிதிகள் விஜயம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சண்முகம் தவசீலன்

வடக்கு மாகாணத்தில், கண்ணிவெடியகற்று பணிகளை முன்னெடுத்து வரும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்துக்கு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகப் பிரதிநிதிகளான இற்றோ பியுமி, ஜனனி கந்தையா ஆகியோர் அண்மையில்  விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, கண்ணிவெடி அகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாகவும் தற்போது வேலை நடைபெறும்  பிரதேசங்கள்  தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதையடுத்து, முகமாலை, மாங்குளம் ஆகிய பிரதேசங்களின் கண்ணிவெடியகற்றும் தளளையும் மாங்குளம் பிரதேசத் தளத்தையும்,  இந்தப் பிரதிநிதிகள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .