2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஹரித்தாஸ் குடியிருப்பு மக்களைச் சந்தித்த தவநாதன்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் தாம் இன்னும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக, அக்கராயன் ஹரித்தாஸ் குடியிருப்பு மக்கள், மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதனிடம் தெரிவித்தனர்.

பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவித்திட்டமொன்றை வழங்கி வைப்பதற்காக ஹரித்தாஸ் குடியிருப்புக்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் தவநாதனிடம், அக்கிராம மக்கள தமது குறைபாடுகள் குறித்து தெளிவுபடுத்தினர்.

குறித்த கிராமத்தில், 200 வரையான குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் பெரும்பாலான வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் பொதுக்கிணறொன்றும் குழாய்க்கிணறொன்றும் மட்டுமே இருப்பதனால் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாளாந்தம் பாடசாலைக்கு சென்று வருகின்ற மாணவர்கள் வீதி சீரின்மையால் நீண்டகாலமாகவே பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாகாணசபை உறுப்பினர் தவநாதனிடம் குறிப்பிட்டனர்.

சில அமைப்புகளால் வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகள் கூட பெரும்பாளானவர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் ஹரித்தாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்தனர்.

மக்களின் கருத்துகளை கேட்டறிந்த மாகாணசபை உறுப்பினர் தவநாதன், குறித்த கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காக முழு முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .