Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜூன் 02 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
“கடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல” என, கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர், திருஞானம் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
மடு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராக நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே இவ்வாறு கூறினார்.
“அரசியல் என்பது எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அரசியலை ஒரு பக்கம் வைத்து கடமைகளை சரியாக செய்தால் அது ஒரு பிரச்சினையாக இருக்காது.
“பல்பரிமான கலை, கலாசார சூழ்நிலைகளுக்குள் மாணவர்களை கல்வியில் நாட்டம் கொள்ள வைப்பதுதான் இன்றை காலக்கட்டத்தின் தேவையாக இருக்கிறது. கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், தனியே ஆசிரியர்கள் மாத்திரமல்ல, மாணவர்கள் பெற்றோர்கள்,
சமூகத்தினர் என அனைவரினதும் கூட்டு உழைப்பு அவசியமாகிறது. கூட்டு உழைப்பின் ஊடாகவே கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்” என, அவர் மேலும் கூறினார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago