2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

’மோசடிகள் இடம்பெறுகின்றதால் விவரங்களை காட்சிப்படுத்துங்கள்’

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்த காலங்கள் என்பன குறித்த விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துவரப்படும் நிலையில்,  அது தொடர்பான விவரங்களை காட்சிப்படுத்தாது ஒப்பந்தக்காரர்கள் கட்டுமான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“கிளிநொச்சி நகரில் பஸ் நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் விவரங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை” என, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்போது, இவற்றுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.  உடனடியாக அவற்றைக்காட்சிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் , அறிவுறுத்தியுள்ளார்.

அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் காட்சிப்படுத்தாமை காரணமாக பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .